கோவை: கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா எனும் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கு, போதைப்பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, பேருந்து நிலைய பகுதிகளில் கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸ் பார்ட்டி சகிதம் கோவை மாநகர் சிங்கநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகில் கண்காணித்துக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு உரிய நபரை பிடித்து விசாரிக்க அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சோந்த அதிமன்னன் மகன் பூவேந்தன் வயது 25 என்பது தெரியவந்தது.
மேற்படி நபர் ஆந்திர மாநிலம் சென்று 48 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கோவைக்கு வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியும் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தேனி மாவட்டத்தை சேரந்த இரண்டு நபர்களை கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.