கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட நபர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியாததால் நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (54). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதி குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்துள்ளார்.
இதையடுத்து சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஆனால், வழக்கிற்கு சாமிநாதன் ஒத்துழைப்பு வழங்காததால், நீதிமன்றம் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான சாமிநாதனுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் 2 வார சிறை தண்டனையும் விதித்து கோவை 8வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், ரூ.10,000 அபராதத்தை தன்னால் கட்ட முடியாது என்றும், 2 வார சிறையை ஏற்பதாக சாமிநாதன் தெரிவித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் சாமிநாதன் அடைக்கப்பட்டார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் கட்ட முடியாததால் சிறை தண்டனையை ஏற்றுக் கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.