கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா தேயிலை தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் ஓட்டுனர். இவருடைய மகன் வில்சன் (20) இவர் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி ஐ.டி படித்து வருகிறார்.

இன்று மாலை கல்லூரி முடிந்ததும் தனது உடன் படிக்கும் நண்பர் அஜீத் (21) என்பவருடன் தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கூழாங்கல் ஆறு அருகே திருப்பத்தில் வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதன் காரனமாக இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் 108க்கு தகவல் தரவே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் வால்பாறை கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.