நீலகிரி: மக்கள் குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காவிட்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்புக்குழு தலைவர் முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கம் உதகையில் நடந்தது.

இந்த கருத்தரங்கை தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்புக்குழு தலைவர் முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி துவக்கி வைத்தார். கிராமிய அபிவிருத்தி இயக்கம் நிறுவன தலைவர் என்.கே.பெருமாள் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்புக்குழு தலைவர் முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி கூறியதாவது;-
தமிழகத்திலுள்ள குப்பைகளை பயோமெட்ரிக் மூலம் தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணி நடைபெறுகிறது. கும்பகோணம், பெருங்குடி போன்ற இடங்களில் இந்த பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு சுகாதாரமான வாழ்வு இன்றியமையாதது எனவும் சுகாதாரமாக வாழ மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டியது மக்களின் கடமையாகும் என்றார்.

மக்கும் குப்பை மூலம் உரம் தயாரித்து விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது எனவும் மீதமுள்ள கழிவுகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றவர், குப்பையை தரம் பிரித்து கொடுக்காத மக்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க சட்டம் உள்ளது என்று கூறினார்.
நகராட்சி ஊழியர்கள் மக்களிடம் குப்பையை பிரித்துக்கொடுக்க இரு முறை கூறலாம் எனவும் மூன்றாம் முறை குப்பையை பிரித்துக் கொடுக்காவிட்டால், அந்த நபருக்கு மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ரூ.5000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குப்பையை தரம் பிரித்துக் கொடுக்காத நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை உண்டு என்றும் குப்பையை தரம் பிரித்துக்கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அபராதம் மற்றும் சிறை தண்டனையை கண்டிப்பாக அமல்படுத்துவதில்லை என்ற போதிலும் காலப்போக்கில் இது நடைமுறைக்கு வரும் என்றார்.
குப்பையை எரிக்கக்கூடாது அது தண்டனைக்குரியது. சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல் நலத்துக்கு தீங்கானது. குப்பை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் விஷ வாயு சுற்றுச்சூழ் மற்றும் உடல் நலனை பாதிக்கும். திருச்சி மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றவர், கேரளாவிலிருந்து எந்தவித மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்று அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் தமிழக டிஜிபி இருக்கும் கடிதம் எழுதி மருத்துவ கழிவுகளை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எழுதப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் வசூல் மையத்திலும் வயதிலும் பணியாளர்கள் இதை கண்டிப்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி மருத்துவ கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றார்.

கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் மனித கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த காய்கறிகள் தரமானதாக 5 நாடுகள் சான்றளித்துள்ளன என்றும் மனித கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு விரிவுபட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பாஸ்கரன், மாவட்ட ஊராக முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அம்பாலினி, மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ் உட்பட கிராம ஊராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.