மத்திய பட்ஜெட்டில் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உள்ளது - ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்

திருப்பூர்: மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையினர் கோரிக்கை பெருமளவு நிறைவேற்றப்படவில்லை என்றாலும் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உள்ளதாக பட்ஜெட் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா.சண்முகம் தெரிவித்தார்.


திருப்பூர்: மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையினர் கோரிக்கை பெருமளவு நிறைவேற்றப்படவில்லை என்றாலும் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உள்ளதாக பட்ஜெட் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா.சண்முகம் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த இந்தியாவை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இருப்பதாகவும் , பின்னலாடை துறை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஜவுளித்துறைக்கென ரூ.1480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றார்.

மேலும், பின்னலாடை வாரியம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வரும் என காத்திருந்தோம் ஆனால், பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. அதேசமயம், சிறு குறு தொழில்களை பாதுகாக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் நிலுவையில் உள்ள EMBEDDED TAX எனப்படும் நிலுவை வரியினை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு பணப்பற்றாக்குறையை போக்க கூடிய பல அறிவிப்புகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளன என்று கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...