ஈஷா யோக மையத்தில்‌ இன்னர்‌ எஞ்சினியர்‌ லீடர்ஷிப்‌ வகுப்பு; 100-க்கும்‌ மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள்‌ பங்கேற்பு!

கோவை: கோவையில்‌ ஈஷா யோகா மையத்தில்‌ இன்று நடைபெற்ற இன்னர்‌ எஞ்சினியரிங்‌ லீடர்ஷிப்‌ வகுப்பில்‌, 84 ஐஏஎஸ்‌ அதிகாரிகள்‌ உட்பட 100-க்கும்‌ மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

கோவை: கோவையில்‌ ஈஷா யோகா மையத்தில்‌ இன்று நடைபெற்ற இன்னர்‌ எஞ்சினியரிங்‌ லீடர்ஷிப்‌ வகுப்பில்‌, 84 ஐஏஎஸ்‌ அதிகாரிகள்‌ உட்பட 100-க்கும்‌ மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

தங்கியிருந்து பயிலும்‌ இந்த 5 நாள்‌ வகுப்பு, கடந்த ஜனவரி 27 முதல்‌ ஜனவரி 31 வரை நடைபெற்றது. இந்திய அரசின்‌ பணியாளர்‌ மற்றும்‌ பயிற்சித்‌ துறை (DoPT) அதில்‌ பணியாற்றும்‌ அதிகாரிகளுக்கு, இந்திய மற்றும்‌ சர்வதேச பயிற்சி மையங்களால்‌ நடத்தப்படும்‌ பல பயிற்சிகளை வழங்குகிறது. அவற்றில்‌ ஈஷாவின்‌ இன்னர்‌ எஞ்சினியரிங்‌ லீடர்ஷிப்‌ பயிற்சியும் ஒன்றாகும்.



5 நாட்கள்‌ இன்னர்‌ எஞ்சினியரிங்‌ பயிற்சியில்‌ உள்ளடங்குவன, உப-யோகா, ஷாம்பவி மஹாமுத்ரா கரியாவிற்கான தீட்சை, மற்றும்‌ தலைமை பண்புக்கான பயிற்சி ஒரு மனிதனின்‌ தனிப்பட்ட மற்றும்‌ தொழில்சார்‌ ஆக்கத்திறன்‌, தலைமைப்பண்புக்கான பயிற்சி என்பது. தொடர்பாடல்‌ திறன்‌ மற்றும்‌ முடிவெடுக்கும்‌ திறன்‌ மேம்பாடு ஆகியவற்றில்‌ அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒருவரின்‌ வாழ்வில்‌ சமநிலை மற்றும்‌ ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவின்‌ 19 மாநிலங்களிலிருந்து செயலாளர்கள்‌, முதல்‌ நிலை செயலாளர்கள்‌ மற்றும்‌ கூடுதல்‌ செயலாளர்கள்‌ உள்ளிட்ட உயர்‌ நிலை அதிகாரிகள்‌ பயிற்சியில்‌ பங்கேற்றனர். பங்கேற்பாளர்களில்‌ பலர்‌, இந்த 5 நாள்‌ பயிற்சி அனுபவம்‌ அபரிமிதமானது என்று கூறியதோடு, ஈஷா தன்னார்வலர்களின்‌ "இணையற்ற ஒருங்கிணைப்பு மற்றும்‌ செயல்திறனை” பாராட்டினர்‌.

இது, கடந்த ஜந்து ஆண்டுகளில்‌ ஈஷாவால்‌ நடத்தப்பட்டு வரும்‌ DoPT நிகழ்ச்சிகளில்‌ 6வது ஆகும்‌. “இன்னர்‌ எஞ்சினியரிங்‌ லீடர்ஷிப்‌” என்னும்‌ இந்த பயிற்சி, தங்கள்‌ முடிவுகளின்‌ மூலம்‌ பலரது வாழ்வில்‌ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பல துறைகளில்‌ தலைமைப்‌ பொறுப்பில்‌ உள்ள முக்கிய நபர்களுக்காக சத்குருவால்‌ பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்‌.

இன்னர்‌ எஞ்சினியரிங்‌

இன்னர்‌ எஞ்சினியரிங்‌, பண்டைய யோக அறிவியலில்‌ இருந்து உருவான ஒரு தொழில்நுட்பம்‌ ஆகும்‌. ஒருவரின்‌ உள்முக நல்வாழ்வினை கட்டமைப்பதற்கான கருவிகளை இது வழங்குகிறது. வாழ்வின்‌ அனைத்து பரிமாணங்களுக்குமான உள்முக அடித்தளத்தையும்‌ பார்வையையும்‌ ஏற்படுத்தவும்‌, பரபரப்பான வாழ்க்கை முறையின்‌ சவால்களுக்கும்‌ அமைதி மற்றும்‌ நல்வாழ்விற்கான உள்முகத்‌ தேடலுக்கும்‌ இடையே தேவையான சமநிலையை அடையவும்‌ இது உதவுகிறது. ஒருவரின்‌ உள்ளுணர்தலை ஆழப்படுத்தி அவர்‌ வாழக்கையை பார்க்கும்‌ பார்வை மற்றும்‌ உலகில்‌ அவருடைய ஈடுபாடு ஆகியவற்றின்‌ அடிப்படையான முறையிலேயே ஒரு பரிமாண மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஈஷா பவுண்டேஷன்‌

ஈஷா பவுண்டேஷன்‌, சத்குருவால்‌ நிறுவப்பட்ட, தன்னார்வத்‌ தொண்டர்களால்‌ நடத்தப்படுகிற, லாப நோக்கற்ற, சர்வதேச, மனித ஆற்றலை வளர்க்கிற ஒரு மனித சேவை அமைப்பாகும்‌. ஈஷா பவுண்டேஷன்‌, 90 லட்சத்திற்கும்‌ மேலான தன்னார்வத்‌ தொண்டர்களால்‌, உலகெங்கிலும்‌ உள்ள 300 மையங்களில்‌ இருந்து இயக்கப்படுகிறது, இந்த அமைப்பின்‌ தலைமையகம்‌, தென்னிந்தியாவின்‌ வெள்ளயங்கிரி மலையடிவாரத்தில்‌ ஈஷா யோக மையம்‌ மற்றும்‌ அமெரிக்காவின்‌ நடு டென்னெஸ்ஸில்‌ உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட்‌ ஆஃப்‌ இன்னர்‌ சயின்ஸஸ்‌ ஆகும்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...