தொழிற்துறையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வரிச்சலுகைகளுடன் மத்திய பட்ஜெட் - சி.ஐ.ஐ பொருளாதார மற்றும் வரிவிதிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்

கோவை: பொருளாதார மந்த நிலையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள சூழ்நிலையில் மக்கள் மற்றும் தொழிற்துறையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சில முக்கிய பெரிய வரிச்சீர்த்திருத்தங்கள் மற்றும் வரிச்சலுகைகளுடன் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக கோயம்புத்தூர் மண்டலம் சி.ஐ.ஐ பொருளாதார மற்றும் வரிவிதிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்தார்.

கோவை: பொருளாதார மந்த நிலையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள சூழ்நிலையில் மக்கள் மற்றும் தொழிற்துறையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சில முக்கிய பெரிய வரிச்சீர்த்திருத்தங்கள் மற்றும் வரிச்சலுகைகளுடன் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக கோயம்புத்தூர் மண்டலம் சி.ஐ.ஐ பொருளாதார மற்றும் வரிவிதிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், சுகாதாரப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் ஒதுக்கீடுகள் சமூகத்திற்கு பெருமளவில் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேவையையும் அதிகரிக்க உதவுகின்றன என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஒரு அபரிவிதமான வளர்ச்சியைத் தூண்டுவதற்கு இவை போதுமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

குறிப்பிடத்தக்க பெரிய மாற்றமாக, செப்டம்பர் 2019 இல் கார்ப்பரேட் வரி பெருமளவு குறைக்கப்பட்டதை போலவே, தனிநபர் வருமான வரி விகிதங்கள் புதிய எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை மூலம் குறைக்கப்பட்டுள்ளன. தனிநபர் வரிகளை குறைப்பதன் மூலம் தனிநபரின் கைகளில் செலவழிப்பு வருமானத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். ஆனால், வரிக்கழிவுகளான வீட்டுக்கடன் வட்டி, எல்.ஐ.சி, மூதலீடுகள் போன்றவற்றை கழிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈவுத்தொகை விநியோக வரி(Dividend Distribution Tax) முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்தாலும், சில பாதகமான தாக்கங்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் நிறுவனங்கள் ஈவுத்தொகை விநியோக வரியாக 15% வசூலித்து வந்தது. தற்போது இது தனிநபரின் கைகளில் அவருக்கான தனிப்பட்ட வருமான வரி விகிதத்தில் வசூலிக்கப்படும். எனவே 30% வரிவிதிப்பிற்கு உட்பட்ட ஒருவர் ஈவுத்தொகையிலும் (Dividend) 30% செலுத்துவார். பட்ஜெட்டின் நோக்கம் செல்வத்தை உருவாக்குவது என்பதைக் கருத்தில் கொண்டால், இது அந்த நோக்கத்துடன் பொருந்தாது.

வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீட்டை அதிகரிப்பதற்கான நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஒரு வைப்புத்தொகையின் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் கம்பெனிகளின் இசாப் (ESOP) மீதான வரி ஒத்திவைக்கப்பட்டது ஒரு நல்ல நடவடிக்கை என்றும் தற்போதைய சூழ்நிலையில் மக்களிடம் தேவையை உருவாக்கி நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என நம்பலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...