கோவை வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்; வெற்றி பெற்றவர்களுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து!

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் துவங்கப்பட்ட வழக்கறிஞர் சங்க தேர்தலானது மாலை நான்கு முப்பது வரை நடைபெற்றது.

இந்தத் தேர்தலானது வாக்கு சீட்டு அடிப்படையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 2850 வழக்கறிஞர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் 2043 பேர் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.



இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்மொழி 922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருஞானசம்பந்தம் 814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கலையரசன் 659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன் 1293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற பொறுப்பாளர்களை சக வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...