நீலகிரி: இராணுவப் பணியில் அர்ப்பணிப்புடனும் தேசப்பற்றுடனும் மாணவிகள் ஈடுபடவேண்டும் என குன்னூர் மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழாவில் மெட்ராஸ் ராணுவ மைய கர்னல் வினோத் ஜோஷி தெரிவித்தார்.

குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 58வது ஆண்டு விழா மற்றும் ரபேல் அடிகளாரின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் ராணுவ மைய கர்னல் வினோத் ஜோஷி மற்றும் ராணுவத் துறை கல்வி அதிகாரி மேஜர் ப்ரீத்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சகோதரி ஜோனா முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி கர்னல் வினோத் ஜோஷி பேசுகையில், தேசத்தை காத்திடும் ராணுவப் பணியில் மனமுவந்து நாட்டுப்பற்றுடன் நற்பணிகள் பலவும் செய்திட மாணவிகள் ஊக்கத்துடன் செயல்படவேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீனவர் வாழ்க்கை சித்தரிக்கும் நடனம், மலையின மக்களின் பாரம்பரிய நடனம், காணிக்கை அன்னை சபை நிறுவனரின் வாழ்க்கை சரித்திரத்தை விவரிக்கும் மௌன மொழி நாடகம், நடைபெற்றது.