கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுப்பது குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்க தொலைபேசி எண் - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தொடர்ச்சியாக ஆலோசனைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தொடர்ச்சியாக ஆலோசனைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கொடும் வைரஸ்களால் பரவும் நோய்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி பல்வேறுபட்ட வைரஸ்கள் காலத்திற்கு ஏற்ப பரவி பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் 6 ஆயிரத்து 78 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 நாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது. தற்போது இந்த நோய்த்தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இந்த நோயானது கேரளா மருத்துவ மாணவிக்கு வந்ததையடுத்து, அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, கோவை உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் உடல் தட்பவெப்பநிலையை பரிசோதிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த திங்கள் கிழமை சீனாவில் இருந்து பெங்களூர் வழியாக கோவை விமான நிலையத்திற்கு வந்த எட்டுபேரில், நான்கு பேர் கோவையைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள், மீதமுள்ள இரண்டு பேரும் சென்னை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளதா என சுகாதாரத்துறை சார்பில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

அதேபோல, நேற்று முன்தினம் சீனாவிலிருந்து வந்த ஈரோடு அந்தியூரை சேர்ந்தவருக்கும், தாராபுரத்தை சேர்ந்தவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நோய் பாதிப்புகள் யாருக்கும் இல்லை என்பதை அறிந்து விடுவிக்கப்பட்டனர்.



அதேசமயம் இவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது எனவும் சளி, காய்ச்சல், போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும் படியும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், பரிசோதனை மையத்தினர் ஆகியோருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை கொடுக்க வேண்டும், எப்படி பாதுகாப்பாக தனிமைப்படுத்த வேண்டும், ரத்த மாதிரிகள் எடுப்பது தொடர்பாகவும் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் கூறும்போது ;-

கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.தனிமனித தூய்மையான பழக்கங்கள் நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கும். தினமும் 10 முதல் 15 முறை கைகழுவும் பழக்கங்கள் வேண்டும். இருமல், தும்மல் போன்றவை வரும் போது மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்க கைக்குட்டையை பயன்படுத்தி பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனிமனித தூய்மை பழக்கங்கள் குறித்தும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, விமான நிலையம் மூலம் இதுவரை வந்துள்ள நபர்களை தினமும் மருத்துவக்குழுவினர் கண்காணித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகவும் அவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் கோவை மாவட்டத்தில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி வாயிலாக பொது மக்களின் சந்தேகங்களை தீர்க்க மாநில சுகாதாரத் துறையும், மாவட்ட சுகாதாரத் துறையும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் பாதிப்புகள் வராமல் தடுக்கவும், அது குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்கவும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளார்.

மாநில சுகாதாரத்துறை ;-

104,

044-29510400,

044-29510500,

9444340496,

கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ;-

6369566177.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...