கோவை: வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதிகளில் பழங்குடியின மக்களான காடர், இருளர்,முதுவர், புலையர் என 16 செட்டில்மென்டுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை, மின்சாரம் போன்றவை கிடையாது. இதனால் மருத்துவ வசதிக்காக பல மணி நேரம், பல கிலோ மீட்டர் வனப்பகுதியை கடந்து மருத்துவ உதவியை பெற வேண்டியுள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் சுரேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர் கவர்க்கல் செட்டில்மென்ட் பகுதிக்கு சென்று முகாம் அமைத்து இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உட்பட பல்வேறு மருத்துவ சோதனைகளை மேற்கொண்டனர்.
மருத்துவ சோதனைக்குப்பின் மருந்து மாத்திரைகளை வழங்கினர். மருத்துவ முகாமில் தலைமை மருத்துவர் சுரேந்திரன், இயற்கை மருத்துவர் கார்த்திகேஷ், சித்த மருத்துவர் பாபு, மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் பழங்குடியினர் 13 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.