தஞ்சை பெருவுடையார் குடமுழுக்கு தமிழில் மட்டுமே நடத்த வேண்டும்; துணை முதலமைச்சரிடம் இயக்குனர் கெளதமன் மனு!

சென்னை: தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான கௌதமன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.


சென்னை: தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான கௌதமன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் இயக்குனர் கௌதமன், தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரு மித்த கருத்துடன் கோரி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யலாம் என்று அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.



மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. எனவே சம்மந்தமே இல்லாத சமஸ்கிருதம் எங்களுக்கு தேவையில்லை எனவும் கூறிய அவர், இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

குறிப்பாக, வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்வில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் போது ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...