கோவை: கோவையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில், கோவையில் வங்கி ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், பென்சன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும், அதிகாரிகளுக்கு வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவை ரயில் நிலையம் முன்பாக, பாங்க ஆப் பரோடா முன்பாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜவேலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 800 வங்கிகள் செயல்படவில்லை எனவும் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனையும் 50 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கபட்டு உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் மாதம் அடுத்த கட்ட வேலை நிறுத்தமும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் 31 லட்சத்திற்கும் மேலான காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 23,000 கோடி ரூபாய் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.