கோவை: வால்பாறையில் மீண்டும் ஒரு சிறுத்தை புலி இறந்த சம்பவம், வனத்துறையினருக்கும் விலங்கியல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வால்பாறை சோலையார் அணை பகுதியில் உள்ளது முருகாளி தேயிலை தோட்டம். கேரள எல்லையை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
இதில் புலி, சிறுத்தை, யானை உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் இன்று சிறுத்தை இறந்து கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர்.

வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரகர் தங்கராஜ் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, உடல் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுத்தையின் முக்கிய பாகங்கள் கோவையிலுள்ள ஆய்வகவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீதமுள்ளவை எரியூட்டப்பட்டது. முள்ளம் பன்றிக்கும் சிறுத்தைக்கும் ஏற்பட்ட சண்டையில் சிறுத்தை இறந்திருக்கலாம் என்று வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஒரே வாரத்தில் இரண்டு சிறுத்தை புலிகள் இறந்தது மிருக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.