புத்துணர்வு முகாம் நிறைவடைந்து சொந்த ஊருக்கு லாரியில் புறபட்ட கோவில்யானைகள்; அமைச்சர்கள் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில்யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முகாம் நிறைவடைந்து யானைகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கபட்டன.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில்யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முகாம் நிறைவடைந்து யானைகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கபட்டன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 28 கோவில் யானைகள் பங்கேற்றிருந்த நிலையில் முகாமில் யானைகள் புத்துணர்வு பெற ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு யானைகள் பராமரிக்கபட்டு வந்தன.



இந்த நிலையில் 48 நாட்கள், ஒரு மண்டலம் நிறைவுற்றதை தொடர்ந்து கடந்த ஒன்னரை மாதங்களாக பாசபினைப்புடன் பழகி வந்த யானைகள் இன்று சொந்த ஊர்களுக்கு செல்ல லாரிகளில் ஏற்றபட்டன.



யானைகளை வாகணங்களில் ஏற்ற முயன்ற போது சக யானைகளை விட்டு பிரிய மனம் இன்றி யானைகள் லாரியில் ஏற மறுத்து அடம் பிடித்தன, இதனையடுத்து கயிறுகளை கட்டி இழுத்தும் பாகண்கள் யானைகளை சமாதானப்படுத்தியும் லாரியில் ஏற்றினர்.

முன்னதாக, நிறைவு விழா நடத்தபட்டு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கரும்பு, ஆப்பிள், அண்ணாசி பழங்கள் கொடுக்கப்பட்டு முகாமினை அறநிலையத்துறை அதிகாரிகள் முடித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு லாரியில் ஏற்றபட் யானைகளை சொந்த ஊர்களுக்கு கொடி அசைத்து அனுப்பிவைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...