“சமூக நீதிக்கான அறப்போர்” நூல் வெளியீட்டு விழா விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்

கோவை: ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணனின் செயல்பாட்டின் தொகுப்பாய் இவரின் 70 ஆண்டுகால சமூக நீதிச் சகாப்தத்தைப் பேசும் "சமூக நீதிக்கான அறப்போர்" என்கிற நூல் வெளியீட்டு விழா இன்று கோவையில் நடைபெற்றது.

கோவை: ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணனின் செயல்பாட்டின் தொகுப்பாய் இவரின் 70 ஆண்டுகால சமூக நீதிச் சகாப்தத்தைப் பேசும் "சமூக நீதிக்கான அறப்போர்" என்கிற நூல் வெளியீட்டு விழா இன்று கோவையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான மு.ஆனந்தனின் மொழி பெயர்ப்பில் உருவான இந்நூலை விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்.

பீளமேடு நவஇந்தியா பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்ட தலைவர் மணி வரவேற்புரையாற்றினார்.



நூலை, ஆர்.நல்லக்கண்ணு வெளியிட கள செயல்பாட்டாளர்கள், படைப்பாளர்கள் என வேலாயுதம், பத்மநாபன், பாலமுருகன், முனைவர் செல்வி, அஷ்ரப் அலி, வெண்மணி, பன்னீர்செல்வம், கார்க்கி, இளவேனில், ஜெகநாதன்,அப்துல் ஹக்கீம், நேருதாசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக, பி.எஸ்.கிருஷ்ணனின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, இன்றைய சமூக சூழல் ஆகியவைகள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமூவேல்ராஜ், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் உரையாற்றினர். இதில, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். நிறைவாக மொழிபெயர்ப்பாளர் மு.ஆனந்தன் ஏற்புரையாற்றினார். 

நிகழ்வில் நிகர் கலைக்குழுவின் தப்பாட்டம், இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் பாடல்கள் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வை தொகுத்து தங்க.முருகேசன்,கரீம், ஜென்னீஸ் ஆகியோர் வழங்கினர்.

முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி நன்றி கூறினார். நூல்வெளியிட்டு விழா நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...