வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழு தலைவர்‌ நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ செயலர்‌ பி.ஜோதிமணி அவர்கள்‌, நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ குறித்து வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ செயலர்‌ பி.ஜோதிமணி அவர்கள்‌, நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர். அப்போது, கோவை மாநகராட்சி, வெள்ளலூர்‌ குப்பை கிடங்கில்‌ செயல்பட்டுவரும்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தில்‌ (Micro Composting Centre) உணவுக்கழிவுகளிலிருந்து உரம்‌ தயாரிக்கப்படுவதையும்‌, உரத்தின்‌ தரம்‌ குறித்தும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை மாநகராட்சி, மத்திய மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌ தொடர்பான ஆய்வுக்கூட்டம்‌ மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ செயலர் பி.ஜோதிமணி தலைமையில்‌, நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌ முன்னிலையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்‌, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் டி.சேகர்‌, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்‌ குரியன்‌ ஜோசப்‌ அவர்கள்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.இலட்சுமணன்‌ அவர்கள்‌, நிர்வாகப்‌ பொறியாளர்‌ சரவணகுமார்‌ அவர்கள்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌, மாநகர பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பின்‌ செயலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது;-

மாநகராட்சியில்‌ பெறப்படும்‌ குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகளை முறையாக தரம்‌ பிரித்து பெறவேண்டும்‌. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, சுகாதார அலுவலர்களின்‌ மேற்பார்வையில்‌ இப்பணிகள்‌ சிறந்த முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ தங்களின்‌ குப்பைகளை தாமகவே முன்வந்து மக்கும்‌, மக்காத குப்பைகளாக தரம்‌ பிரித்து சுகாதாரப்‌ பணியாளர்களிடம்‌ கொடுத்து மாநகராட்சியின்‌ பணிகள்‌ மேலும்‌ சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்கள்‌ (Micro Composting Centre) அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர்‌ விரைந்து முடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌. வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை சரியான முறையில்‌ திறந்தவெளியில்‌ தரம்‌ பிரித்த பின்னரே சேகரித்து வைக்க வேண்டும்‌. குப்பைகள்‌ குவியல்களாக குவித்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்‌ என மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்‌ குழுவின்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பின்‌ செயலர்‌ பி.ஜோதிமணி தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌ தெரிவித்தபோது;-

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, பாரதி பூங்கா அருகில்‌ உணவு கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ்‌ மூலம்‌ மின்சாரம்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ மாநகராட்சியினர்‌ சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும்‌ மக்கும்‌, மக்காத குப்பைகளை சேகரிக்கும்‌ பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாநகராட்சியின்‌ சார்பில்‌ *கா& ௧0௩ வாகனங்கள்‌ மூலம்‌ குப்பைகள்‌ பெறப்பட்டு மாநகராட்சியால்‌ சேகரிக்கப்பட்டு வருகிறது என நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌.கா.பாஸ்கரன்‌ தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...