கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ராதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சிறப்பாகவும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் உணவு தானிய இயக்கத்தின் கீழ் உள்ள நெல், சிறுதானியம் மற்றும் பயறுவகை பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பு இலக்கான 43,000 ஹெக்டரில் 2020 ஜனவரி மாதம் முடிய 39288 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை மூலம் 2019-20-ம் ஆண்டுக்கு 19 கூட்டு குழுக்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டு 12 வட்டாரங்களில் இருந்து கிராமங்கள் மற்றும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் கூட்டாக பண்ணையம் செய்வதை ஊக்குவிக்க ரூ.5 இலட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வாங்க தற்போது வாங்குவோர், விற்பவர் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட இயந்திரங்கள் வாங்க நிதி வழங்கப்படும். நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் கீழ் கோடை உழவுக்கு ஏக்கருக்கு ரூ.500/- மானியம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளான தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டைகள் அமைத்தல் பணிக்கு தொகுப்பிற்கு ரூ.5 லட்சம், 50% மானிய விலையில் விதைகள், உயிர் உரங்கள், நுண்சத்து உரங்கள், போன்ற திட்டங்களையும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்கு ரூ.10 லட்சம் ஒரு தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பிற்கு தேவையான தாது உப்புகள், இனப்பெருக்க குறைபாடு நிவர்த்தி, மடிவீக்க நோய் சிகிச்சை கால்நடை பராமரிப்பு துறை செயல்படுத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் அவர்கள் 2019-20ம் ஆண்டு நிதிநிலை அறிவிப்பில் முதலமைச்சர் அவர்களின் காய்கறிகள் மற்றும் பழங்கள் பரப்பு விரிவாக்கம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறிகள் மற்றும் 10 ஏக்கர் பழங்கள் சாகுபடி சராசரி பரப்போடு சேர்த்து கூடுதலாக மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டது. பழங்கள் சாகுபடியில் நடப்பு ஆண்டிற்கு வழங்கப்பட்ட மொத்த இலக்கு 11225 எக்டரில் இதுவரை 9312 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் சாகுபடியில் நடப்பு ஆண்டிற்கு வழங்கப்பட்ட மொத்த இலக்கு 14253 எக்டரில், இதுவரை 9698 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2019-20ம் ஆண்டில் 40 சதவித மானியத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு அதிகரித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலைகூடாரம், பறவை தடுப்பு வலை, நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தரம் பிரித்து சிப்பம் கட்டும் அறை வெங்காய சேமிப்புக் கிடங்கு, குளிர்வூட்டும் அறை, சூரிய உலர்த்தி நடமாடும் விற்பனை ஊர்தி ஆகிய அறுவடை பின் செய் நேர்த்தி இனங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி உள்மாநிலம் மற்றும் வெளிமாநிலத்தில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
மின்சார துறையால் செயல்படுத்தப்படும் தட்கல் திட்டத்தின் கீழ் 1399 மின் இணைப்புகள் வழங்க இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 519 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் இந்த ஆண்டு ரூ.340 கோடி வேளாண்மை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.250.39 கோடி வேளாண்மை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் போதிய மழை பெய்துள்ள நிலையிலும், ஏரி குளங்கள் நிரம்பியுள்ள நிலையிலும் முறையாக விவசாயம் மேற்கொண்டு வருவாய் பெருக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட விவசாயிகளை கேட்டுக்கொண்டதுடன் அதற்கு வேளாண்/தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். மேலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் சார்பில் வரகு சாகுபடி தொழில்நுட்பங்கள், என்ற கையேட்டினை வெளியீட்டு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் விவசாயிகளுக்கு கையேடுகளை வழங்கினார்.