திருப்பூர்: சாலை விபத்தில் உயிரிழந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் திருப்பூர் மாவட்ட நிருபர் ராஜசேகரனுக்கு திருப்பூரில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ராஜசேகரன் கடந்த 29ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த அவரது தாயார் ஜானகி ராணி அவர்களும் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட செய்தியாளர்கள் அலுவலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்துகொண்டு ராஜசேகரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முத்துக்கண்ணன், ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குமார், நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் சுந்தர பாண்டியன், கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் சந்திரசேகர், நேர்மை மக்கள் இயக்கம் சார்பில் ரகுபதி, வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டு ராஜசேகரன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
மேலும், ஊடக களத்தில் ராஜசேகரன் சிந்தனைகளை செயலாக்குவது எனவும் அவரது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதோடு அரசின் உதவிகளை விரைந்து பெற்றுத்தர வேண்டும் எனவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.