கோவையில் வரும் 9ம் தேதி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலசட்டை பேரணி - கு.இராமகிருட்டிணன்

கோவை: பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 9ம் தேதி நடைபெறும் நீலசட்டை பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

கோவை: பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 9ம் தேதி நடைபெறும் நீலசட்டை பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்தித்து அவர் பேசுகையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் ஒன்பதாம் தேதி 150க்கும் மேற்பட்ட பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய முற்போக்கு அமைப்புகள் இணைந்து அம்பேத்கர் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணியும், சாதி ஒழிப்பு மாநாடு வஉசி மைதானத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவை விகேகே மேனன் சாலையிலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாக வஉசி மைதானம் வரை செல்லும் இந்த பேரணியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மைதானத்தில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. தீண்டாமை, அடக்குமுறை கல்வி, வேலை வாய்ப்புகளை மறுத்தல், சாதிய ஒடுக்குமுறை என அனைத்து ஒடுக்குமுறைகளை புறந்தள்ளப்பட்ட மக்கள் அதிகம் எனவும் இதன் முதற்படி முயற்சிதான் கருஞ்சட்டை பேரணியும் தற்போதைய நீல சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

இதில் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ராஷ்ட்ரிய தலித் அதிகார மன்ச் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகல்கான்பாகவி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான், திரைப்பட நடிகர் சத்யராஜ், திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், கரு.பழனியப்பன், மருத்துவர் ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

இந்த பேரணிக்கு மாநகர காவல்துறை காலம் தாழ்த்தி அதைத்தொடர்ந்து பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் மாநாடு நடத்த தடையில்லை என நீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும் இதில் 150 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தற்போது அவர் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, வெண்மணி திராவிடர் தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிகுமார், இளவேனில் தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர், நவீன் ஒருங்கிணைப்பாளர் தமிழர் விடியல் கட்சி, ஆறுச்சாமி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், தந்தை பெரியார் திராவிட கழக உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...