விபத்தில்லா அரசு பேருந்து இயக்கம்: கோவை மாவட்டத்தில் வால்பாறை சிறந்த கிளையாக தேர்வு..!

கோவை: வால்பாறையில் பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பிரதேசமாகும். இங்கு பேருந்துகள் தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கிளையின் மூலம் 32 பேருந்துகள் பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், கோவை மற்றும் தேயிலை தோட்டுப்பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த ஆண்டு பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு, பராமரிப்பு மற்றும் சேவைக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் முதல் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு அதற்கான விழா வால்பாறை கிளையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம் வால்பாறை கிளை மேலாளரிடம் சான்றிதழ் வழங்கினார்.

மேலும், இந்த கிளையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர், பணிமனை பணியாளர்கள் அலுவலர்கள் உட்பட 240 பேருக்கு அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம், மண்டல மேலாளர் ஜோதி மணிகண்டன், வால்பாறை கிளை மேலாளர் சந்திரசேகரன், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...