கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுக்கையில் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாமில் அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பழங்கள், கரும்புகள் கொடுத்து முகாமினை முடித்து வைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன. முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள், பசுந்தீவனங்கள், நடைப்பயிற்சி, மருத்துவ வசதி ஆற்றுநீரில் குளித்து மகிழ ஷவர்பாத் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், 48 நாட்கள் ஒரு மண்டலம் நடைபெற்ற இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், யானைகள் பவானி ஆற்றின் ஷவரில் குளித்து அலங்கரிக்கப்பட்டு முகாமில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன, பின்னர் முகாம் வளாகத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் யானைகளுக்கு பழங்களை வழங்கி முகாமினை முடித்து வைத்தார். முகாமில் உள்ள யானைகளை அழைத்து செல்ல சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் சார்பில் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு யானைகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளனர்.