கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அம்மசோதாவினை திரும்பப் பெறக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நடைபெறும் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி வரும் பிப்ரவரி 2ம் தேதி நடக்கிறது.இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கோவை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC சட்டங்களுக்கு எதிராக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹுசைன் தெரிவித்தார்.
தேசிய அளவில் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டதிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் இந்த சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். இந்த சட்டத்தினால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என வடிகட்டிய பொய் தொடர்ந்து பாஜக கூறி வருகிறது எனவும் இது சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்தார்
மேலும், டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்துக்குரியது எனவும் காந்தி நினைவு நாளில் இது நடந்துள்ளாதாகவும் பாஜக அரசு பல்லாயிரக்கணக்கான கோட்சேகளை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு கண்டனத்துக்கு உரியது என்றவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு சட்டமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.