கோவை: கோவையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில் கோவை ரயில் நிலையம் பாங்க் ஆப் பரோடா முன்பாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், பென்சன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், சனி, ஞாயிறு விடுமுறை வழங்க வேண்டும், அதிகாரிகளுக்கு வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் பாங்க் ஆப் பரோடா முன்பாக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைவர் மீனாட்சி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் இரு நாட்களுக்கு 800 கோடி ரூபாய் பணபரிவர்த்தனை பாதிப்பு ஏற்படும் என்றும் தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் மாதம் அடுத்த கட்ட வேலை நிறுத்தமும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.