வால்பாறையில் வனத்துறையினரை ஏமாற்றி தேநீர் கடையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்!

கோவை: வால்பாறை அருகே வனத்துறையினரை ஏமாற்றி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தேநீர் கடையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

கோவை: வால்பாறை அருகே வனத்துறையினரை ஏமாற்றி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தேநீர் கடையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த பகுதியில் சிவகுமார் என்பவர் தேநீர் கடையுடன் மளிகை கடையை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. நேற்றைய முன்தினம் இப்பகுதியில் உள்ள நியாய விலை கடை மற்றும் சத்துணவு கூடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின.



தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் வனத்துறையினரால் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வாகனங்களுடன் காவலர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர். நள்ளிரவு அப்பகுதிக்குள் வந்த 3 காட்டு யானைகள் சிவகுமாரின் கடையை உடைத்து சூறையாடின. இதில் கடையில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி கடைக்குள் சிக்கிய சிவகுமாரை மீட்டனர்.



வனத்துறையினரின் முகாம் மற்றும் வனத்துறையினரின் தீவிர ரோந்து பணியின் போது காட்டு யானைகள் வனத்துறையினரை ஏமாற்றி கடையை உடைத்த சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...