கோவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்; 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் வேலைகளை வழங்கக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கட்சியினர், இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து வ.ஊ.சி. மைதானம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.



இந்த போராட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இங்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது 5 கிலோ மீட்டர் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடத்துவதாகவும் தெரிவித்தார். 

மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...