திருப்பூரில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி பவர் கிரிட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது.



இதற்காக அரசு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இழப்பீடு இன்னும் சரியாக வழங்கப்படவில்லை எனவும் கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச இழப்பீடு போல திருப்பூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...