கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாகவும் மேலும் போதைப்பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாகவும் கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் கோவை மாநகர் மத்திய ரயில்நிலையம் பகுதியில் கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு உரிய ஒரு நபரை பிடித்து விசாரித்த போது, அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சடையத்தேவர் மகன் இளையராஜா(55) என்பது தெரியவந்தது. மேற்படி நபர் ஆந்திர மாநிலம் சென்று 22 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர், அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைத்தனர்.