கொரேனா வைரஸ் எதிரொலி: மாவட்ட அளவிலான 43 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கோவையில் பேட்டி

கோவை: சீனாவில் பரவிவரும் கொரேனா வைரஸ் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவரை தாக்கியுள்ள நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


கோவை: சீனாவில் பரவிவரும் கொரேனா வைரஸ் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவரை தாக்கியுள்ள நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவிவரும் கொரேனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் இருக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் கொரேனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், சிறப்பு வார்டுகளை ஆய்வு செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:-

தமிழகத்தில் கொரேனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் ஆனது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி, பின்னர் மனிதர்களிடம்  இருந்து மனிதர்களுக்கு பரவி வருகின்றது.

இந்த வைரஸ் கைகள் மூலமாகவே வேகமாக பரவுகின்றது. அதனால் இருமல் மற்றும் தும்மல் வரும் போதும் கர்சீப்பால் மூடிக்கொள்ள வேண்டும். தினமும் கைகளை 15 முறையாவது சோப்பு போட்டு கழுவவேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம்  இருப்பவர்களும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். அதேபோல விமானநிலையத்தில் தொடர் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் ஆய்வு செய்யும் வசதி தற்போது பூனாவில் மட்டும்  இருக்கின்றது. கூடுதலாக 10 இடங்களில் இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. சென்னையில் கிங்ஸ்  மருத்துவமனையில் ஆய்வு செய்யும் வசதி ஒரு சில தினங்களில் கொண்டு வரபட  இருக்கின்றது.

கொரானா வைரஸ்க்கு தடுப்பு மருந்து இல்லை என்ற தவறான தகவல் பரப்பப்படுகின்றது. இதை பொது மக்கள் நம்ப வேண்டாம். எளிய முறைகள் மூலம் இந்த வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தில் 78 பயணிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்கள் முதல்  28 நாட்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். சளி, காய்ச்சல், இருமல் போன்றவை கொரானா வைரஸ் அறிகுறிகள். கிராம சுகாதார ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைக ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகிறது.

அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மத்திய அரசு அவ்வப்போது இந்த வைரஸ் குறித்து பயிற்சியும், விழிப்புணர்வும் அளித்து வருகின்றது. இது வரை யாருக்கும் மாதிரிகள் எடுக்கும் தேவை  ஏற்படவில்லை.

அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் கொரேனா வைரஸ்  மாதிரி எடுக்கும் வசதி இருக்கின்றது.  மாதிரி எடுத்து விரைவாக பூனா அனுப்ப வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் ஒரு சில தினங்களில் ஆய்வகம் ஏற்படுத்தபடும். 

கேரளாவில் கொரேனா வைரஸ் பரவவில்லை. சீனாவில் இருந்து வந்த கேரளாவை  சேர்ந்த மாணவருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரேனா வைரஸ் குறித்து கண்டறிய 43 மாவட்ட அளவிலான ரேபிட் ஆக்‌ஷன்  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...