17 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடங்கியது

திருப்பூர்: திருப்பூரின் பண்பாட்டுத் திருவிழாவாக அடையாளம் பெற்றுள்ள 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா - 2020 இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

திருப்பூர்: திருப்பூரின் பண்பாட்டுத் திருவிழாவாக அடையாளம் பெற்றுள்ள 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா - 2020 இன்று  உற்சாகமாகத் தொடங்கியது.

திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.  திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டித் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை ஏற்றார். 

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணைத் தலைவர் மைக்கோ வேலுச்சாமி, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினர்.



தொடக்க நாள் நிகழ்வில் வரவேற்புக்குழுத் தலைவர் மோகன் கே.கார்த்திக், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், நிர்வாகிகள் அரிமா எம்.ஜீவானந்தம், எம்பரர் வி.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 102 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னணி புத்தகப் பதிப்பகங்கள் 42 அரங்குகளிலும், புத்தக விற்பனையாளர்கள் 60 அரங்குகளிலும் புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

மொத்தம் 11 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. வாசகர்கள், பார்வையாளர்கள் வாகன நிறுத்தம், சிற்றுண்டி உள்ளிட்ட பிற வசதிகளுக்காக இம்முறை கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வரவேற்புக்குழுவினர் தெரிவித்தனர்.

முதல் புத்தக விற்பனையை சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் தொடங்கி வைக்க, டாக்டர் நல்லி குப்புசாமி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். முன்னதாக நிமிர்வு கலைக்குழுவினர் நூறு பறைகளில் இசை முழக்கம் செய்து பார்வையாளர்களை ஈர்த்தனர்.







Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...