கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்‌ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்‌ உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்‌ உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்திய சுதந்திர போராட்டத்திற்காக உயிர்‌ நீத்த தியாகிகளுக்கு மெளன அஞ்சலி (Martyrs Day - 30.01.2020) அனுசரித்தும்‌, அதனை தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும்‌ (Pledge against untouchability) உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழி விபரம்‌ வருமாறு;-

“இந்திய அரசியலமைப்பின்பால்‌ இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக்‌ குடிமகன்‌ /குடிமகள்‌ ஆகிய நான்‌, நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒஓழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்‌. தீண்டாமையை அடிப்படையாகக்‌ கொண்டு, எவர்மீதும்‌ தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம்‌, வாக்கு, செயல்‌ என்ற எந்த வகையிலும்‌ கடைபிடிக்கமாட்டேன்‌ என்று இதனால்‌ உளமார உறுதியளிக்கிறேன்‌.

அரசியலமைப்பின்‌ அடிப்படைக்‌ கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில்‌ நேர்மையுடனும்‌, உண்மையுடனும்‌ பணியாற்றுவது எனது கடமையாகும்‌ என்பதையும் உணர்வேன்‌. இந்திய அரசியலமைப்பின்பால்‌ எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும்‌ எடுத்துக்காட்டாக விளங்குமென்றும்‌ இதனால்‌ உளமார உறுதியளிக்கிறேன்‌.”” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) சுந்தாராஜன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

இந்த நிகழ்ச்சியில்‌ நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி (ஸ்மார்ட்‌ சிட்டி கணக்கு), நிர்வாக அலுவலர்‌ எம்‌.நூர்‌ அகமது, கணக்கு அலுவலர்கள்‌ லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு) மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...