கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி!

கோவை: கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 75 இலட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை: கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 75 இலட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகள் கீதாஞ்சலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீதாஞ்சலி மீது S16 என்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீதாஞ்சலியின் இடது கை சேதமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 



இதையடுத்து, இழப்பீடு கேட்டு ஜனார்த்தனன் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வட்டியுடன் 75 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இருப்பினும் இழப்பீடு வழங்காததால் ஜனார்த்தனன் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதில் இழப்பீடு வழங்காததால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் இன்று கோவை ரயில் நிலையம் வழியாக வந்த அப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...