மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம் நாளையுடன் நிறைவு..! சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகும் யானைகள்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் 48 நாட்கள் யானைகள் நலவாழ்வு முகாம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப யானைகள் ஆயத்தமாகி வருகின்றன.

கோவை: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் 48 நாட்கள் யானைகள் நலவாழ்வு முகாம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப யானைகள் ஆயத்தமாகி வருகின்றன. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப் படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



கோவில்களில் மக்கள் வெள்ளத்தின் நடுவே திருப்பணிகளை மட்டும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் யானைகளுக்கு அவற்றின் மன அழுத்தத்தையும் சோர்வை போக்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த யானை முகாம் துவங்கப்பட்டது. 



மூன்றாண்டுகளாக முதுமலை தெப்பகாட்டில் நடத்தப்பட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம் பின்னர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றபட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 12வது ஆண்டாக தொடர்ந்து இந்தாண்டும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன. இதில் மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பழமையான கோவில்களில் இருந்து அனைத்து யானைகளும் இம்முகாமில் கலந்துகொண்டன. 



இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது வனவிலங்குகளுக்கு மிக உகந்த மேற்குதொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் மூன்று பக்கங்களும் மலைகளாலும் சூழ்ந்து பவானி ஆற்றங்கை ஓரத்தில் இயற்கையான சூழலில் நடத்தப்பட்டு வருகிறது. இயற்கையான சூழலில் 48 நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளை பராமரிக்க ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. 

இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனங்கள், சோளத்தட்டு, கூந்தபனை, தென்னை மட்டை, மசால் புல் உள்ளிட்ட பசுந்தீவனங்களும், கொள்ளு, பாசிப்பயிறு, பேரிட்சை, அரிசி சாதம் போன்ற ஊட்டச்சத்து உணவு வகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவு பங்கீடுகள் மூலம் சமச்சீர் உணவுகள் அளிக்கப்படுவதுடன் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானைகளுக்கு உடல் எடையை குறைக்க காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபயிற்சியும் அளிக்கப்பட்டு யானைகளின் ஆரோக்கியம் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 



மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கும் சிறு சிறு காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவக்குழு முகாமில் அமைக்கப்பட்ட ஒரு தலைமை மருத்துவர் தலைமையில் ஏழு பேர் கொண்ட மருத்துவக்குழு 24 மணிநேரமும் யானைகளை கண்காணித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 



பொதுவாக யானைகள் வன உயிரினம் என்பதால் அவைகளுக்கான தண்ணீர் தேவை என்பது மிக அதிகம் அதுவும் இயற்கையின் கொடையாக உள்ள வனங்களில் இருந்து ஓடும் ஆற்று தண்ணீரில் குளித்து மகிழ்வது என்பது யானைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வரும் நிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே ஆறுகள் உள்ளன. எனவே, ஆறுகள் இல்லாத மாவட்டங்களிலும் கடல் சார்ந்த மாவட்டங்களில் பராமரிக்கப்படும் கோவில் யானைகளுக்கு இந்த வசதிகள் இல்லாததால் அந்த யானைகளுக்கு போர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதால் இம்முகாமில் அனைத்து யானைகளும் பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ சவர் பாத் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆற்று நீரினை கண்ட பல்வேறு கோவில் யானைகளும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றன. பாகன்களே அழைத்தாலும் கூட எழுந்து வர அடம் பிடிக்கும் இந்த யானைகள் சவரில் படுத்து உற்சாகமாக குளித்து வருகிறது. 

யானைகள் எப்போதும் கூட்டமாக வாழும் குணமுடையது ஆனால், அவைகள் கோவில்களில் வைத்து பராமரிக்கப்படுவதால் தன்னை போன்ற ஒரு உயிர் உள்ளது என்பதை இம்முகாமின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அப்படி இருக்க 

ஒரே மாவட்டத்தில் இரண்டு மூன்று கோவில் யானைகள் இருந்தாலும் கூட ஒரு முறை கூட யானைகள் ஒன்றை ஒன்றை பார்க்க வாய்ப்புகள் மிக குறைவு ஆகவே, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சந்தித்து கொள்ளும் வாய்பினை பெறும் இந்த யானைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கூடி சந்தித்து கொள்வதால் யானைகள் பாசத்துடன் துதிக்கையால் ஒன்றை ஒன்று கட்டி தழுவியும் உற்சாகத்தில் சப்தம் எழுப்பி பிளிரியும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன. 

அத்துடன் எப்போதும் சிமெண்ட் காங்கிரீட் தளங்களில் கட்டி வைத்து பராமரிக்கப்படும் யானைகள் முகாமில் தரையிலும் குளிர்ந்த நிழலில் அடர்ந்த மரங்களின் அடியே பராமரிக்கப்படுவதால் யானைகளுக்கே உரித்தான வகையில், தரையில் உள்ள மண்ணை தலையில் வாரி போட்டுக்கொண்டு யானைகள் உற்சாக மனநிலையில் திகைக்கின்றன. மேலும், சில யானைகள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக மவுத்ஆர்கான் வாசித்து உற்சாகம் அடைந்து வருகிறது. 

மேலும், இந்த முகாமில் பார்வையாளர்களை அனுமதிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு யானைகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் யானைகளை காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததால் யானைகள் முகாமே சுற்றுலாத்தளமாக மாறியது. தங்களது குறும்புகளால் ரஷ்யா கலைஞர்கள் வரை தம்பக்கம் ஈர்த்த தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவுற்று, சொந்த கோவில்களுக்கு திரும்ப செல்ல வேண்டியது கட்டாயம் என்பதால் பிரியா விடைக்கு தயாராகி வருகிறது முகாம் யானைகள். கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்றோடு ஒன்று பிரியாமல் சேர்ந்தே இருந்த யானைகள் பிரிவதை எண்ணி மிகுந்த சோகத்தில் உள்ளன. 

இந்த பிரிவு யானைகளுக்கு மட்டுமல்ல தங்களுக்கும் தான் என வருத்தம் தெரிவிக்கும் யானை பாகன்கள், பல மாவட்டங்களில் கோவில்களிலும் மடங்களிலும் யானைகளை பராமரிக்கும் தங்களை போன்ற பாகன்கள் தமிழகம் முழுவதில் இருந்து ஒரே இடத்தில் கூடி கடந்த ஒன்றரை மாதங்களாக யானைகளை பராமரித்து வந்ததால் சக பாகன்களிடம் இருந்து பல்வேறு விசயங்களை கேட்டு கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தனர். ஒரே குடும்பமாக இருந்த தாங்களும் முகாம் நிறைவடைந்து திரும்புவதை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவிக்கும் யானை பாகன்கள் யானைகளின் மனதை தேற்றி சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தனர். 

கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி துவங்கிய யானைகள் முகாம் வரும் 31ம் தேதி நாளை மாலையுடன் முடிவுறுகிறது. இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைகள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...