கோவை: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.1934ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று 6வது முறையாக அவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், தற்போது எழுந்துள்ள அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை காப்பாற்ற இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும் எனவும் பி.யூ.சி.எல் மற்றும் சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற நுழைவாயிலில் ஒன்றுகூடிய வழக்கறிஞர்கள் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.