மேட்டுப்பாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.கவினர் வெற்றி

கோவை: மேட்டுப்பாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.கவினர் வெற்றி பெற்றனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.கவினர் வெற்றி பெற்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓடந்துரை, தோலம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. 



காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த மறைமுக தேர்தலில் தோலம்பாளையம், ஓடந்துரை ஆகிய ஊராட்சிகளுக்கு மட்டுமே நடைபெற்றது. ஓடந்துரை ஊராட்சியில் ஒன்பது பேர் கொண்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆறு பேர் வாக்களித்து அ.தி.மு.கவை சேர்ந்த ஜானகி என்பவரை துணைத்தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். 



இதேபோல், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சின்னக்கள்ளிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வராததால் போதிய கோரம் இன்றி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

முன்னதாக, ஓடந்துரை ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் இரண்டு பேர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ததால் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...