கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அவ்வளாகத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வளாகத்தில் 165 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நா.கார்த்திக், அவசரகதியில் மாநகராட்சி தேர்தலுக்காக பேருந்து நிலையத்திற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டியுள்ளார் என குற்றம்சாட்டினார்.
வெள்ளலூர் பகுதிக்கு மாநகர பகுதியில் இருந்து செல்ல போதிய சாலை வசதிகள் இல்லை எனவும் சாலைகள் செப்பனிடப்படாமல் இருப்பதாக கூறிய அவர், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். குப்பை கிடங்கு வளாகத்தில் பேருந்து நிலையம் அமைப்பதால் பொதுமக்களுக்குத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னர், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.