கேரளா: சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் கேரளாவை சேர்ந்த, மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு, தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 81 பேர் இறந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் சமீபத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடல் உணவு, வனவிலங்கு சந்தையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வைரஸ் சீனாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் உயர்ந்து 2,744 ஆகியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் கேரளாவை சேர்ந்த, மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு, தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என்றார்.