கோவை: தேசிய தொழு நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற தேசிய தொழு நோய் விழிப்புணர்வு பேரணியை துணை ஆணையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார்.

தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகள் உள்ள பகுதிகளில் வீடுகளில் முழுவதும் களப்பணி மேற்கொண்டு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சிகிச்சையை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 89 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி, ஜி.கே.என்.எம் செவிலியர் மாணவிகள், வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியை துணை ஆணையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையில் உள்ள சுகாதார இனை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவுற்றது.