கோவில் கும்பாபிஷேக விழாவில் தவறவிட்ட ரூ.3,500 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர் ஒருவர் தவறி விட்டுச் சென்ற ரூபாய்.3500 பணத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர் ஒருவர் தவறி விட்டுச் சென்ற ரூபாய்.3500 பணத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை ஆர்எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட சீரநாய்க்கன்பாளையத்தில் நேற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது, கோவில் வளாகத்தில் கீழே கிடந்த கைப்பையில் ரூ.3,500 ரொக்கம் இருந்துள்ளது. இதையடுத்து கைப்பையை எடுத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அதிலிருந்த முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரான கோகுல் குமார் மற்றும் அவரது மனைவி நந்தினியை வரவழைத்தார்.

இதைத்தொடர்ந்து அந்த தம்பதியிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 3500 அளிக்கப்பட்டது. கீழே கிடந்த பணத்தை ஒரு மணிநேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...