அதிமுக பெயரில் போலி இணையதளம் துவங்கிய வழக்கு: முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி ஜாமீன் மனு தள்ளுபடி!

கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் துவங்கியதுடன் அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கோவை சூலூர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் துவங்கியதுடன் அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கோவை சூலூர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுக பெயரில் இணையதளம் தொடங்கி செயல்பட்டதாகவும் இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி மீது சூலூர் முகத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரும் அதிமுக பிரமுகருமான கந்தவேல் சூலூர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமியை கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். கே.சி. பழனிச்சாமி மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு கே.சி.பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனு இன்று சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.சி.பழனிச்சாமி மீதான வழக்கின் விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனுவை நீதிபதி வேடியப்பன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...