கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று காவல்துறை மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பினரும் இனைந்து கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை காவல் உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன் மற்றும் முரளி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள் என 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று மதுப்பழக்கத்தால் குடும்ப கட்டமைப்பு பாதிக்கப்படுவது சாலைகளில் குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறுவது குறித்து நாட்டுப்புறப் பாடல்கள் வழியே பாடியும் தப்பாட்டம் மூலம் ஆடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.