நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 10 பேரும் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் நேற்றும் இன்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த முறை நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் பஞ்ச விஸ்வகர்மா ஆகிய இருவரிடம் இன்று மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.