கோவை: செல்போன் டவர் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீரநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை தமிழ்நாடு வேளான் கல்லூரி அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. அதற்கான உபகரணங்கள் இன்று வந்து இறங்கிய நிலையில், செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் செல்போன் டவர் அமைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவர்கள் கூறுகையில், அப்பகுதியில் செல்போன் டவர் அமையும் பட்சத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் எனவும் குழந்தைகள் முதியவர்கள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை தவிர்த்து மாற்று இடத்தில் இதனை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.