கோவை மாநகராட்சி‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட‌ வளர்ச்சிப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி ஆய்வுக்‌ கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌, பி.ஆர்‌.ஜி.அருண்குமார்‌, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகர பொறியாளர்‌ ஆ.இலட்சுமணன்‌, உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த கூட்டத்தில்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ தெரிவித்ததாவது;-

கோவை மாநகராட்சியில்‌, அம்மா அவர்களின்‌ வழியில்‌, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்‌ ஆணையின்படி, சாலைகள்‌, பாலங்கள்‌, பூங்காக்கள்‌ அமைத்தல்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை அமைத்தல்‌ போன்ற ஏராளமான வளா்ச்சிபபணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில்‌ ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரூ.989.860 கோடி மதிப்பில்‌ பணிகள்‌ சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளலூர்‌ பகுதியில்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌, கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ சூரியமின்‌ சக்தி பணிகள்‌, பசுமை பூங்காக்கள்‌ அமைத்தல்‌, பாதாள சாக்கடை அமைக்கும்‌ திட்டப்‌ பணிகள்‌, காற்றுத்‌ தரம்‌ கண்காணிக்கும்‌ கருவி, உக்கடம்‌ சூரிய மின்சக்தி நிலையம்‌ அமைத்தல்‌ போன்ற பல்வேறு பணிகள்‌ குறித்து அமைச்சர்‌ அவர்கள்‌ இக்கூட்டத்தில்‌ ஆய்வு செய்தார்.



மேலும்‌, பெரியகுளம்‌ வடகரை புனரமைத்தல்‌, வாலாங்குளம்‌ குறுக்கே நடைபாதை அமைத்தல்‌ பணி, வாலாங்குளம்‌ மேம்பாலத்தின்‌ கீழ்‌ மேம்பாட்டு செய்தல்‌ பணி, பெரியகுளம்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ போன்ற வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து அமைச்சர்‌ அவர்கள்‌ ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும்‌, செல்வசிந்தாமணிகுளம்‌, கிருஷ்ணம்பதிகுளம்‌, செல்வம்பதி, குமாரசாமி குளம்‌, சிங்காநல்லூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகிய 9 குளங்களில் மேம்பாட்டுப்‌ பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும்‌, திவான்‌ பகதூர்‌ சாலை மாதிரி சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்‌, உக்கடம்‌ சூரிய மின்சக்தி நிலையம்‌, 24X7 குடிநீர்‌ திட்டப்பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல்‌, வீடுவீடாக குப்பைகள்‌ சேகரிக்க வாகனம்‌ போன்ற அனைத்து பணிகளையும்‌ தரமானதாகவும்‌, விரைந்து முடிக்குமாறும்‌ சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அறிவுறுத்தினார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...