திருப்பூர்: தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்றால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழை கட்டாயம் வழிபாட்டு மொழியாக்க முடியுமா என திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆதரவு தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து திருப்பூரில் தாராபுரம் சாலையில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தமிழகத்திலும் இந்தியாவிலும் எந்த ஒரு மதத்திற்கும் பாதிப்பில்லை என்பதை தெரிவிக்கும் விதமாகவே பாஜக சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்ற எனவும் அசாமை தனிநாடாக ஆக்க வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜே.என்.யூ மாணவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என கேள்வி எழுப்பினார்.
முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. அன்று அவர் இந்தியாவை பிரித்தார், இன்று காங்கிரஸ் மற்றும் திமுக அதே வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200% ஆதரிக்கிறேன் ஆனால், தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் தமிழில் வழிபடுவதை உறுதி செய்திட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.