திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து பெண்கள் தாலிக்கயிறுடன் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து பெண்கள் தாலிக்கயிற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து பெண்கள் தாலிக்கயிற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியதை போல கூடுதல் இழப்பீடு கேட்டும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் பெண்கள் தாலிக் கொடியை மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்துச் செல்வதாக தாலிக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாய நிலங்களில் டவர்லைன் அமைக்க வரும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...