கோவை: கோவை அடுத்த சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் காதலிக்க மறுத்த இளம் பெண்ணுடன் எடுத்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள விவேகானந்தா வீதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவர் இன்ஜினியரிங் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம் பெண் ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட உள்ளதாக காதலியின் சகோதரிக்கு மிரட்டல் விடுத்து, அவரது புகைப்படங்களை சகோதரியின் செல்போன் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரூபன் கைதுசெய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.