கோவை: கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து மாவட்ட வார்டு தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த குழுவின் தலைவராக கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து விரிவான ஆலோசனையானது நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒ.கே.சின்னராஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.