சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேர் கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்ததில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 பேரும் 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் 8 பேரும் தனி இடத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...