உதகை கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இளைஞர்கள் பலியான சம்பவம்: 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் உடல்கள் மீட்பு

நீலகிரி: உதகையில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்கள் இரண்டு நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டது.

நீலகிரி: உதகையில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்கள் இரண்டு நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எல்க்ஹில் பகுதியில் வசித்து வருபவர் சாமுவேல் (24) மற்றும் கணேஷ் (24) மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர், கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா விடுமுறை அன்று கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர்.

குளிக்கச் சென்ற 7 இளைஞர்களுக்கும் நீச்சல் தெரியாத நிலையில் குளிக்க தடை விதித்த பகுதியில் தடையை மீறி குளிக்க சென்றுள்ளனர். அப்போது, அச்சத்தால் ஐந்து இளைஞர்கள் குளிக்காமல் வெளியே பாறையில் அமர்ந்திருந்த நிலையில், சாமுவேல், கணேஷ் ஆகிய இருவர் தங்களது நண்பர்களிடம் தாங்கள் குளிக்க செல்வதாகவும் அதை செல்போனில் படம் பிடிக்க கூறிவிட்டு குளிக்க சென்றுள்ளனர்.



அப்போது, நண்பர்கள் அந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தபோதே இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கும் காவல்துறையினருக்கும் கொடுத்த புகாரின் அடிப்படையில், இரண்டு நாட்களாக இருவரின் உடலை தேடும் பணி நடைபெற்ற நிலையில், போதிய உபகரணம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து வருகை தந்த 21 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழுவும், கன்னியாகுமரியில் இருந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிட தேடலுக்குப் பின் கணேஷ் என்பவர் உடல் மட்டும் மீட்கப்பட்டது. அதன் பின்னர் மற்றொருவரான சாமுவேலின் உடலும் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...